Wednesday, February 08, 2006

FMPB மற்றும் சில கிறிஸ்துவ நிறுவனங்கள் கடந்த 25 ஆண்டுகளாக தென்-குஜராத் பகுதியில் மிக தீவிரமான சுவிசே மற்றும் சமூக பணியில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக ஃபில் மற்றும் குக்னா மக்கள் மத்தியில் எழுத்தறிவு, மருத்துவம், வேதாகம மொழி பெயர்ப்பு, சபைகள் நிறுவுவது என பல வழிகளில் சமுகப் பணியாற்றி வருகிறது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக FMPB தனது ஊழியத்தை தென் குஜராத் பகுதியில் தமது ஊழியத்தை ஆரமித்தது, அனேக மிஷனெரிகளின் உழைப்பால் சபைகள் நறுவி அனேக மக்கள் தங்கள் பாவ வழிகளைவிட்டு சிலுவையின் மேல் கிறிஸ்து இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிரோடு எழும்பியதை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். என்னுடைய கடந்த குஜராத் பயணத்தின் போது அந்த பகுதி சபைளையும் சில தமிழ் மிஷனெரிகளையும் சந்திக்க நேர்ந்தது. அப்போது அந்த பகுதியில் உபத்திரவங்களின் மத்தியில் சபை எவ்வாறு நிறுவப்பட்டது, மக்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு மாறியுள்ளது என பல நிகழ்வுகளை விவரித்தனர். இந்த பகுதியில் சுமார் 2000 சபைகள் நிறுவப்பட்டுள்ளன். ஜந்து முறை நான் அந்த பகுதிகளை கடந்து சென்று இருக்கிறேன், ஒவ்வொரு முறையும் அந்த பகுதிகளை கடக்கும் போது நம் மிஷனெரிகளின் உழைப்பையும் அர்பணிப்பான வாழ்வையும் தேவன் அவர்களை பயன்படுத்தியவிதத்தை எண்ணி வியப்பதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக , குறிப்பாக தீய வகுப்புவாத சக்திகள் குஜராத்தில் வலுவாக காலுண்றிய பிறகு சுவிசே பணிகளை தடுக்கும் முயற்சியில் ஈட்டுபட்டு வருகின்றனர். அதில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளனர், மேலும் தங்களது அடுத்த கட்ட பணியாக "கர் வாபஸி"(घर वाबसि or Ghar Wapsi - வீடு திரும்பு or Back to Home) என்னும் திட்டத்துடன், தென் குஜராத்தின் டாங்ஸ்(Dangs) மாவட்டத்தில் உள்ள சுபிர்(Subir) ல் ஒரு கும்ப மேளா நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த குதியில் அனேக கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கட்டாயமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கும்பமேளா பிப்ரவரி 11- 14 -ம் தேதி வரை அங்கு நடை பெறும். கும்பமேளா என்பது ஒரு சில பகுதயில் தான் நடத்த முடியும், அதாவது புனித நகரம் அல்லது புனித இடம் என்று செல்லபபடும் ஹரித்துவார்,காசி,நாசிக். இந்த இடங்களில் மட்டும் பல காலமாக கும்பமேளா நடை பெற்று வருகிறது. இந்த இடங்களைத் தவிர வேறு எங்கும் கும்மமேளா நடைபெறுவதில்லை. அப்படியிருக்க "சுபிர்" எனப்படும் ஒரு காட்டு பகுதியில் , அதுவம் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் கும்பமேளா நடை பெறப்போவது நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக சுமார் நாண்கு கோடி மதிப்பில் ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது.
இந்த கும்பமேளாவின் போது இந்த பகுதியில் கிறிஸ்தவர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை தாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காவி கொடியை அனைத்து இந்துகளின் வீடுகள் மேலும் கட்டாயமாக பறக்கவிடும்படி கூறிவருகின்றனர். கொடி பறக்காத வீடுகள் கிறிஸ்துவர்களின் வீடுகள் என அடையாளம் காணப்படுகிறது. கும்பமேளாவின் போது சுமார் ஜந்து இலட்சம் மக்கள் அங்கு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மக்களுடன் மக்களாக கலந்து இருக்கும் வெளிஆட்கள்(2002 குஜராத் கலவரத்தின் போது முஸ்ஸிம்களை தாக்கியது போன்று.) மூலம் கிறிஸ்தவர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டு தாளங்களை தாக்கி நீர்முலம் ஆக்கி அதன் முலம் அந்த பகுதியில் தங்கள் தளத்தை வலுவாக்கவும், பயந்த மக்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கொண்டுவரவும் "கர் வாபஸி" என்ற இந்த திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டு வருகின்றனர். இதற்காக வெளி ஆட்கள் குறிப்பாக அண்டை மாநிலங்களான மாஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து "சுபிர்" பகுதியில் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த நிகழ்சிகளை குறித்து கிறிஸ்துவ அமைப்புகள் மைய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரிவித்துள்ளனர். மாநில பா.ஜ.க. அரசு இதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது ஊரறிந்தது. இந்த பகுதியில் போதிய அளவு பாதுகாப்பு இருக்குமா? என்பது ஐயமே. மேலும் தற்போது ஒரு C.D இந்த பகுதியில் காண்பிக்க பட்டுவருகிறது, அதில் கிறிஸ்துவர்களை இராவணனுக்க ஒப்பாக சித்தரித்தும், அவர்களை வதம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக திருப்பி விடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் அங்கு ஒரு வித பதட்டமான சுழ்நிலை நிலவிவருகிறது. கிறிஸ்துவின் மக்கள் ஒரு நாளும் ஆயதங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், வாணத்தையும் பூமியையும் தம் வார்த்தையால் உண்டு பண்ணி கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஜனம் என்பதால், சுபிர் கிறிஸ்தவர்கள் ஒருகாலும், எந்த சுழ்நிலையிலும் பின்வாங்க மாட்டர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும்?
ஜெபம்.
ஆம் நண்பர்களே, ஜெபம் மட்மே நமக்கு ஜெயம் கொடுக்கும். முழங்கால் யுத்தம் முற்றிலும் வெற்றி தரும்.(தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.1கொரி -4:20) நம் கடந்த கால அனுபவஙகள் முலம் நாம் இதை உணர்நதுள்ளோம். "நான் "சுபிர்" பகுதியில் இல்லை ஆகவே இதனால் எனக்கோ என் குடுபத்தினர்க்கோ எந்த பதிப்பும் இல்லை, நான் இந்தி பிரச்சனைகள் எதுவும் இல்லாத பகுதியில் இருப்பதால் தேவனுக்கு நன்றி" -என இருந்து விடாமல் எஸ்தர் புத்தகத்தில் உள்ள இந்த வசனங்களை நினைவில் கொள்ளவும்
//எஸ்தர் 4-13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொனனது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.எஸ்தர் 4:14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.//
ஆம், நண்பர்களே ஏற்ற காலத்தில் மவுனமாயிராமல், கிழ்கண்டவற்றை நம் ஜெபங்களில் நினைவு கொள்ளவும்.
1. கிழ் கண்ட கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் சபைகள் பணியாற்றி வருகிறது. அவர்களின் பாதுகாப்புக்காக, - CNI,IEM,FMPB,NMS,Roman Catholics Chruch.
2. மிஷனெரிகள், சபைகளின் மேய்ப்பர்கள், உள்ளுர் ஊழியக்காரர்களின் பாதுகாப்புக்காக (பவுல் இவ்வாறு கூறுகிறார் - எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன்
அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும்
மனுஷருக்கும் வேடிக்கையானோம்.1 கொரி 4:9)3. இந்த உபத்திரவத்தின் உடே சபைகள் மேலும் வளர,4. Dangs மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்புக்காக 5. வகுப்பு வாத சக்திகளின் மனமாற்றத்திற்காக, அவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிலுவை அன்பை புரிந்து கொண்டு இரட்சிக்கப்பட.(நான்(இயேசு) உங்களுக்குச்
சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு - 5:44)6. அங்குள்ள சபைகள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் அனைத்தும் தாக்குதல்கள் எதுவும் நடந்தால் முற்றிலும் அமைதி காப்பது என்று முடிவு எடுதுள்ளனர். இந்த
முடிவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் (நான்(இயேசு) உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலதுகன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு - 5:39)

உங்கள் கருத்துகளை நீங்கள் இங்கு பதியலாம். "சுபிர்" பகுதியில் நடைபெறும் நிகழ்சிகளை திரட்டி விரைவில் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.மேலும் இது குறித்த செய்திகள் நவம்பர் 18 Week -கில் காணலாம்
கிறிஸ்துவின் பணியில்
-விஜய் பெங்களூர்
பி.கு.:- முடிந்தால் இந்த மின்-ஆஞ்சலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் இந்த ஜெப யுத்ததில் பங்கு பெறும் படி செய்யுங்கள்).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.