Wednesday, February 08, 2006

FMPB மற்றும் சில கிறிஸ்துவ நிறுவனங்கள் கடந்த 25 ஆண்டுகளாக தென்-குஜராத் பகுதியில் மிக தீவிரமான சுவிசே மற்றும் சமூக பணியில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக ஃபில் மற்றும் குக்னா மக்கள் மத்தியில் எழுத்தறிவு, மருத்துவம், வேதாகம மொழி பெயர்ப்பு, சபைகள் நிறுவுவது என பல வழிகளில் சமுகப் பணியாற்றி வருகிறது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக FMPB தனது ஊழியத்தை தென் குஜராத் பகுதியில் தமது ஊழியத்தை ஆரமித்தது, அனேக மிஷனெரிகளின் உழைப்பால் சபைகள் நறுவி அனேக மக்கள் தங்கள் பாவ வழிகளைவிட்டு சிலுவையின் மேல் கிறிஸ்து இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிரோடு எழும்பியதை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். என்னுடைய கடந்த குஜராத் பயணத்தின் போது அந்த பகுதி சபைளையும் சில தமிழ் மிஷனெரிகளையும் சந்திக்க நேர்ந்தது. அப்போது அந்த பகுதியில் உபத்திரவங்களின் மத்தியில் சபை எவ்வாறு நிறுவப்பட்டது, மக்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு மாறியுள்ளது என பல நிகழ்வுகளை விவரித்தனர். இந்த பகுதியில் சுமார் 2000 சபைகள் நிறுவப்பட்டுள்ளன். ஜந்து முறை நான் அந்த பகுதிகளை கடந்து சென்று இருக்கிறேன், ஒவ்வொரு முறையும் அந்த பகுதிகளை கடக்கும் போது நம் மிஷனெரிகளின் உழைப்பையும் அர்பணிப்பான வாழ்வையும் தேவன் அவர்களை பயன்படுத்தியவிதத்தை எண்ணி வியப்பதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக , குறிப்பாக தீய வகுப்புவாத சக்திகள் குஜராத்தில் வலுவாக காலுண்றிய பிறகு சுவிசே பணிகளை தடுக்கும் முயற்சியில் ஈட்டுபட்டு வருகின்றனர். அதில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளனர், மேலும் தங்களது அடுத்த கட்ட பணியாக "கர் வாபஸி"(घर वाबसि or Ghar Wapsi - வீடு திரும்பு or Back to Home) என்னும் திட்டத்துடன், தென் குஜராத்தின் டாங்ஸ்(Dangs) மாவட்டத்தில் உள்ள சுபிர்(Subir) ல் ஒரு கும்ப மேளா நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த குதியில் அனேக கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கட்டாயமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கும்பமேளா பிப்ரவரி 11- 14 -ம் தேதி வரை அங்கு நடை பெறும். கும்பமேளா என்பது ஒரு சில பகுதயில் தான் நடத்த முடியும், அதாவது புனித நகரம் அல்லது புனித இடம் என்று செல்லபபடும் ஹரித்துவார்,காசி,நாசிக். இந்த இடங்களில் மட்டும் பல காலமாக கும்பமேளா நடை பெற்று வருகிறது. இந்த இடங்களைத் தவிர வேறு எங்கும் கும்மமேளா நடைபெறுவதில்லை. அப்படியிருக்க "சுபிர்" எனப்படும் ஒரு காட்டு பகுதியில் , அதுவம் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் கும்பமேளா நடை பெறப்போவது நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக சுமார் நாண்கு கோடி மதிப்பில் ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது.
இந்த கும்பமேளாவின் போது இந்த பகுதியில் கிறிஸ்தவர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை தாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காவி கொடியை அனைத்து இந்துகளின் வீடுகள் மேலும் கட்டாயமாக பறக்கவிடும்படி கூறிவருகின்றனர். கொடி பறக்காத வீடுகள் கிறிஸ்துவர்களின் வீடுகள் என அடையாளம் காணப்படுகிறது. கும்பமேளாவின் போது சுமார் ஜந்து இலட்சம் மக்கள் அங்கு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மக்களுடன் மக்களாக கலந்து இருக்கும் வெளிஆட்கள்(2002 குஜராத் கலவரத்தின் போது முஸ்ஸிம்களை தாக்கியது போன்று.) மூலம் கிறிஸ்தவர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டு தாளங்களை தாக்கி நீர்முலம் ஆக்கி அதன் முலம் அந்த பகுதியில் தங்கள் தளத்தை வலுவாக்கவும், பயந்த மக்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கொண்டுவரவும் "கர் வாபஸி" என்ற இந்த திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டு வருகின்றனர். இதற்காக வெளி ஆட்கள் குறிப்பாக அண்டை மாநிலங்களான மாஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து "சுபிர்" பகுதியில் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த நிகழ்சிகளை குறித்து கிறிஸ்துவ அமைப்புகள் மைய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரிவித்துள்ளனர். மாநில பா.ஜ.க. அரசு இதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது ஊரறிந்தது. இந்த பகுதியில் போதிய அளவு பாதுகாப்பு இருக்குமா? என்பது ஐயமே. மேலும் தற்போது ஒரு C.D இந்த பகுதியில் காண்பிக்க பட்டுவருகிறது, அதில் கிறிஸ்துவர்களை இராவணனுக்க ஒப்பாக சித்தரித்தும், அவர்களை வதம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக திருப்பி விடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் அங்கு ஒரு வித பதட்டமான சுழ்நிலை நிலவிவருகிறது. கிறிஸ்துவின் மக்கள் ஒரு நாளும் ஆயதங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், வாணத்தையும் பூமியையும் தம் வார்த்தையால் உண்டு பண்ணி கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஜனம் என்பதால், சுபிர் கிறிஸ்தவர்கள் ஒருகாலும், எந்த சுழ்நிலையிலும் பின்வாங்க மாட்டர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும்?
ஜெபம்.
ஆம் நண்பர்களே, ஜெபம் மட்மே நமக்கு ஜெயம் கொடுக்கும். முழங்கால் யுத்தம் முற்றிலும் வெற்றி தரும்.(தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.1கொரி -4:20) நம் கடந்த கால அனுபவஙகள் முலம் நாம் இதை உணர்நதுள்ளோம். "நான் "சுபிர்" பகுதியில் இல்லை ஆகவே இதனால் எனக்கோ என் குடுபத்தினர்க்கோ எந்த பதிப்பும் இல்லை, நான் இந்தி பிரச்சனைகள் எதுவும் இல்லாத பகுதியில் இருப்பதால் தேவனுக்கு நன்றி" -என இருந்து விடாமல் எஸ்தர் புத்தகத்தில் உள்ள இந்த வசனங்களை நினைவில் கொள்ளவும்
//எஸ்தர் 4-13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொனனது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.எஸ்தர் 4:14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.//
ஆம், நண்பர்களே ஏற்ற காலத்தில் மவுனமாயிராமல், கிழ்கண்டவற்றை நம் ஜெபங்களில் நினைவு கொள்ளவும்.
1. கிழ் கண்ட கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் சபைகள் பணியாற்றி வருகிறது. அவர்களின் பாதுகாப்புக்காக, - CNI,IEM,FMPB,NMS,Roman Catholics Chruch.
2. மிஷனெரிகள், சபைகளின் மேய்ப்பர்கள், உள்ளுர் ஊழியக்காரர்களின் பாதுகாப்புக்காக (பவுல் இவ்வாறு கூறுகிறார் - எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன்
அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும்
மனுஷருக்கும் வேடிக்கையானோம்.1 கொரி 4:9)3. இந்த உபத்திரவத்தின் உடே சபைகள் மேலும் வளர,4. Dangs மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்புக்காக 5. வகுப்பு வாத சக்திகளின் மனமாற்றத்திற்காக, அவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிலுவை அன்பை புரிந்து கொண்டு இரட்சிக்கப்பட.(நான்(இயேசு) உங்களுக்குச்
சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு - 5:44)6. அங்குள்ள சபைகள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் அனைத்தும் தாக்குதல்கள் எதுவும் நடந்தால் முற்றிலும் அமைதி காப்பது என்று முடிவு எடுதுள்ளனர். இந்த
முடிவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் (நான்(இயேசு) உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலதுகன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு - 5:39)

உங்கள் கருத்துகளை நீங்கள் இங்கு பதியலாம். "சுபிர்" பகுதியில் நடைபெறும் நிகழ்சிகளை திரட்டி விரைவில் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.மேலும் இது குறித்த செய்திகள் நவம்பர் 18 Week -கில் காணலாம்
கிறிஸ்துவின் பணியில்
-விஜய் பெங்களூர்
பி.கு.:- முடிந்தால் இந்த மின்-ஆஞ்சலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் இந்த ஜெப யுத்ததில் பங்கு பெறும் படி செய்யுங்கள்).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 01, 2005

இயேசு காவியம்
ஊதாரிப் பிள்ளை



ஒரு தந்தை இருமக்கள் ஊர்முழுதும்
சொத்து
ஒருபிள்ளை அவர்களிலே மணியான
முத்து!
சிறுபையன் ஊதாரி தேறாத
நெத்து
தீராத மழையினிலே கரையேறும்
வித்து!

தன்பாகம் வேண்டுமெனத் தந்தையிடம்
கேட்டான்
தந்தை அவன் மொழிகேட்டுச் சரிபாதி
தந்தான்!
தந்தானே யல்லாது தாளாது
துடித்தான்
தன்பிள்ளை வாழட்டும என்றேதான்
கொடுத்தான்!

குருட்டுமகன் தன்சொத்தைக் குறைந்தவிலை
விற்றுக்
கொண்டோடி வெளிநாட்டில் கும்மாள
மிட்டான்!
பொருட்பெண்டிர் மதுவென்று போனவழி
சென்று
பொருள்தேய்ந்து புகழ்தேய்ந்து தெருவினிலே
நின்றான்!

அந்நாட்டில் பெரும்பஞ்சம் அவ்வேளை
சூழ
அறியாத இளமைந்தன் அலைந்தானே
வாழ!
தன்னாட்டு மனிதனிடம் ஒருவேலை
தேட
தந்தானே ஒருவேலை பன்றிகளோ
டாட!

பன்றிக்குத் தருகின்ற உணவேதான்
உணவு
பாவிக்கு நாளெல்லாம் தந்தையவன்
கனவு!
அந்நேரம் தெளிந்ததுகாண் அவனுடைய
அறிவு
அப்பாவின் கால்களிலே விழுகின்ற
நினைவு!

‘என்தந்தாய் வானுக்கும் உமக்குமெதி
ரானேன்
எத்தனையோ ஊழியர்கள் இங்கிருக்கப்
போனேன்!
உன்வீட்டுக் கூலிகளில் ஒருவனென
ஏற்பாய்
உன்பிள்ளை என்றுசொலத் தகுதில்லை
காப்பாய்!’

இப்படிப்போய் விழவேண்டும் என்றெண்ணிச்
சென்றான்
எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையின்முன்
நின்றன்!
அப்பா என் மகனே என் றணைத்தானே
தந்தை
அன்பான தந்தையின்முன் அழுததவன்
சிந்தை!

எப்போது வருவாயென் றெண்ணியிருந்
தேனே!
இளைத்தாயே என்மகனே கண்மணியே
தேனே!
தப்பான பிள்ளையல்ல எதுவும்வொல்
லாதே!
சந்தர்ப்பம் செய்தசதி வருவாய்இப்
போதே!

யாரங்கே பணியாள்வா, பட்டாடை
நகைகள்
அத்தனையும் அணியுங்கள் அலங்கார
வகைகள்!
பேர்சொல்லும் மகனுக்குப் பெருங்கன்றின்
கறிகள்
பிழையாமல் செய்யுங்கள் விரைவில் எனச்
சொன்னான்!

மாலையிலே மூத்தமகன் மனைக்குவரும்
போது
மனையினிலே சங்கிதம் நடனவகை
நூறு!
சாலையிலே நின்றபடி ஏன்சத்தம்?
என்றன்
தம்பிஇன்று வந்துள்ளார் என்றெருவன்
சொன்னான்!

ஆத்திரத்தில் வெளிப்புறமே மூத்தமகன்
நின்றான்
அப்போது தந்தையவன் அந்த இடம்
வந்தான்!
சாத்திரத்தை மறந்தவனைத் தடபுடலாய்
ஏற்றீர்
சாப்பாடு நடனமென ஏற்றுகிறீர்
போற்றி!

உங்களுடன் இருந்தவரை நானென்ன
கண்டேன்
ஒருநாளும் எனக்கென்று விருந்துவகை
உணடா?
கண்கலங்கி மூத்தமகன் இவ்வாறு
சொல்ல
கனிவோடு தந்தையவன் மறுவார்த்தை
சொன்னான்:

என்னோடு என்றும்நீ இருப்பவனே
யன்றோ
என்செல்வம் எந்நாளும் உன்னுடைய
தன்றோ!
உன்தம்பி இறந்ததன்பின் உயிர்பெற்று
வந்தான்
உண்மையிலே மறுபிறவி அதற்காகச்
செய்தேன்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அந்நியரை ஈர்த்த அன்னைத்தமிழ் - பாகம் 1

நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.
தமிழ்மொழியின் வரலாற்று வீழ்ச்சியும் அதன் சீரழிவுகளும்
“ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள். ஆம். சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது . சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றது. சிறிது, சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வியாபிக்க, தென் பகுதியில் திராவிட இனம் சிறுமை படதொடங்கியது.(அது இன்று வரை தெடர்கிறது). கழகக்காலம் வரையில் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த, நம் தாய்மொழியாகிய தூய,இனிய செந்தமிழ், அதற்குப் பின், ஆரியரின் வேதமத்தாலும், மற்ற காரணங்களாலும் தாக்குண்டு, படிபடியாய்ச் சீர்கெட்டது. தொல்காப்பியத்துள் கூறப்பெறும் வடமொழிச் சேர்ப்பு இலக்கணமும், அம் மொழி வந்து தமிழில் கலந்து வழஙகுவதற்கு வழிவகுத்ததாகவே அமையும். ஆரியரின் வேதமொழியும் வடதிரவிட மொழிகளான பிராகிருதமும் பாலியும் கலந்து செய்யப் பெற்ற சமற்கிருதமும் சமய நோக்கத்துடன் தமிழ் மொழியொடு கலக்கப்பெற்று அதைச் சீர்குலைத்தன. வேத ஆரியர்களும், தமிழ் மூல நூல்களைத் தம் மொழியாகிய சமற்கிருத்தில் பெயர்த்தெழுதித் தம் மொழிக்கு ஏற்றம் தேடிக் கொண்டு, தமிழ் மூலநூல்களை அழித்தனர். இவ்வாறு மதப் போராட்டங்களாலும், வேதமத்தின் அளவிறந்த வளர்ச்சியாலும் தமிழ்மொழி மேன்மேலும் சீரழிந்து கலப்பு மொழியாய்ப் பெருமை குன்றி வாழ வேண்டுயதாயிற்று. ஊர்ப் பெயர்களும் வடமொழியாகிய சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பெற்று வழ்க்கூன்றன. ஏராளமான வடமொழிச் சொற்கள் மக்கள் வாழ்வியலின் அன்றாடப் புழக்கத்தில் ஏறின. உரைநடை நூல்கள், செய்யுள் நூல்கள்,இசை,நாடகம் எனும் அனைத்திலும் வடமொழி ஆட்சி செலுத்தியது. களப்பிரர், பல்லவர் ஆட்சியரசுகள் வடமொழியாளர்க்கும் அவரின் வேத மதத்துக்குமே ஊக்கமளித்துப் போற்றிப் புரந்தன. மக்களுக்குள் சாதி வேறுபாடுகள் கற்பிக்கப்பெற்று, இனவொற்றுமையும் சீர்குலைக்கப்பெற்றது. அரசியல், குமகாயம், சமயம் ஆகிய முத்துறைகளிலும் பிராமணர்களின் ஆளுமை கொடிகட்டிப் பறந்தது. இந்த வீழ்ச்சி பயணம் 17ம் நூற்றாண்டு வரை தெடர்ந்து.
தரங்கை வளர்த்த தமிழியல்
தரங்கம்பாடிக் கடற்கரையில் 1706ஆம் ஆண்டு ஆனித் திங்கள் சீகன்பால்கு(Bartholomaeus Ziegenbalg) கால் வைத்த அன்றே தமிழ் வளர்ச்சி பாதையில் வீருநடை போடதுவங்கியது. இவ்வாறு கிறித்தவ மதத்திற்க்கும் தமிழியிற் கல்விக்கும் ஒரே சமயத்தில் தூதுவராக விளங்கிய அந்தப் பெருமகன் முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிவைத்த தமிழியலை நன்றியுணர்வோடு குறிப்பிட்டாக வேண்டும். என்ன செய்தார் அவர்: • தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து உலகநீதி,கொன்றைவேந்தன், நீதிவெண்பா முதலிய தமிழ் நூல்களை மொழிபெயர்த்தது • ஓலைச்சவடிகளாக இருந்த தமிழ்நூல்களைத் தேடித் தொகுத்து ஒரு நூலகத்தை நிறுவிக்ககொண்டது • தமிழ்ச் சுவடிக்களுக்கு ஒரு விளக்கப் பட்டியலை அமைத்துக்கொண்டது • தமிழைப் பயிலும்போதே அகராதிகளைத் தொகுக்கத் தொடங்கியது. • தமக்குப் பின் தமிழைக் கற்போருக்குப் பயன்படுமாறு தமிழ் இலக்கணம் ஒன்றை வரையறுத்தது. • தமிழ் மக்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கியது.இது போன்ற தமிழ் பணிகளை அவர் கணணி,வகனம்,தட்டச்சு மற்றும் சரியாக காகிதம் கூட இல்லாமல் மணலில் தமிழை எழுதிப் பழகி மேற்கண்ட பணிகளை நிறைவேற்றியது வியப்புக்குரியதேயாகும். தொலைநோக்கோடு செயலாக்கப்பட்ட இப்பணிகளின் மூலமாகத் தமிழியலுக்கு வலிவான கால்கோளை அமைத்துவிட்டதோடு தமிழியல் வரலாற்றில் புது மரபொன்றையும் அவர் உருவாக்கிவிட்டார்.இவருக்குப் பின் சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்த வால்தர்(Walther), பப்ரிலியுஸ்(Fabricius), ப்ரைடஹதுப்ட்(Breithaupt), பைஸன் ஹெர்ட்ஸ்(Beisenherx) கிரவுல்(Graul), ரெனியுஸ்(Rhenius), பைத்தான்(Beythan), ஷொமேருஸ்(Schomerus), லேமன்(Lehmann) போன்ற பேரறிஞர்களும் சீகன்பால்கின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழியலை வளர்த்தனர். இதன் விளைவாக இந்தியவியலோடு தமிழியலும் இணைந்து செயல்படத் தொடங்கியது. தொடக்காலத் தமிழியலுக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி சிரிவான நூல்களும் கட்டுரைகளும் முன்பே வெளிவந்துள்ளன. பேராசிரியர் தனிநாயக் தொகுத்து வழங்கிய ‘வெளிநாடுகளில் தமிழியல்: நல்ல கட்டுரைத் தொகுதி(Xavier S.Thaninayagam, Tamil Studies Abroad: Asymposium, 1968) என்னும் நூலில் டாக்டர் ஆல்ப்ரெஹ்ட் வெட்ஸலர்(Dr.Albrecht Wetzler) டாக்டர் அரனோலேமன்( Dr.Arno Lehmann) ஆகிய இருவரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவற்றை விரிவாக் காணலாம்.
செம்மொழி
கால்டுவெல் (Rev. Robert Caldwell) அவர்களின் “திரவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்” . தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பை உணர்த்தியதுடன், தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதென்னும் தவறான கருத்தை உடைத்தெறிந்து; அஃது ஓர் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை நிலைநாட்டியது. தமிழ் ஒரு செம்மொழி என்பதை நிலை நாட்டுவதற்க்காக அவர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கால்நடை பயணமாக ஒவ்வொரு கிராம பகுதிக்கும் சென்று தமிழ் சொற்களை தொகுத்தார்(Word List ). என்னென்றால் அங்கு தான் வடமொழி சொற்கள் கலக்காத தூய தமிழ் சொற்கள் கிடைக்கும் என்று அவர் அவ்வாறு செய்தார். அவ்வாறு அவர் தொகுத்த சொற்கள் முலம் அவர் தமிழ் தனித்தியங்க வல்ல நல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுருத்தினார்.
கால்டுவெல் பற்றிய ஒரு சம்பவத்தை தங்களிடம் பகிந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த திரு.க.அன்பழகன் ஒரு முறை திருநெல்வேலிக்கு அரசாங்க அலுவல் காரியமாக வந்தார் அப்போது அவர் திருநெல்வேலிக்கு அருகில் கால்டுவெல் கடைசியாக இருந்த விட்டிற்க்கு வருகை தந்தார். அந்த நினைவு இடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கால்டுவெல் பயன்படுத்திய பொருள்களை பார்த்துக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் அங்கு இருந்த ஒருவர் கால்டுவெல் பயன்படுத்தி வந்த ஒரு படுக்கையை காண்பித்து இதில் தான் கால்டுவெல் தூங்கினார் என்று கூறினார். அதற்க்கு அன்பழகன் “கால்டுவெல்க்கு உண்மையிலே தூங்க நேரம் இருந்ததா என்ன?” . ஆம் அவருக்கு தூங்க நேரம் இருந்து இருக்காது தான். எம் மொழியை, எம்தமிழ் மொழியை செம்மொழி என இந்த தரணிக்கு உணர்த்த அவர் இரவு பகல் பாராது அயராது உழைத்தார். தமிழ் மொழியை கன்னித்தமிழ் என்பதை அவர் நிருபணம் செய்ய அவர் தம்மையே அதற்கென அர்ப்பணித்தார். தமிழ் ஒரு செம்மொழி என அறிவிக்கபட இருக்கும் இந்த நேரத்தில் கால்டுவெல் செய்த பணியை நாம் கடுகளவும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
- தொடரும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, August 19, 2005

கடிகாரம்
நின்றுபோன கடிகாரம்
சொன்னது
அது நின்ற நேரத்தை
மிகச்சரியாக
ஒரு நாள் காலையில் தற்செயலாக மணி பார்க்கலாம் என்று கடிகாரத்தை பார்த்தால் அது நின்று போயிருந்தது. எத்தனை மணிக்கு நின்று இருக்கும் என்று யோசித்த கொண்டே இருந்த போது - கடிகாரம் என்னை பார்த்து சிரித்தக் கொண்டே சென்னது அது நின்று போன நேரத்தை-
விஜய்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.