Thursday, December 01, 2005

இயேசு காவியம்
ஊதாரிப் பிள்ளை



ஒரு தந்தை இருமக்கள் ஊர்முழுதும்
சொத்து
ஒருபிள்ளை அவர்களிலே மணியான
முத்து!
சிறுபையன் ஊதாரி தேறாத
நெத்து
தீராத மழையினிலே கரையேறும்
வித்து!

தன்பாகம் வேண்டுமெனத் தந்தையிடம்
கேட்டான்
தந்தை அவன் மொழிகேட்டுச் சரிபாதி
தந்தான்!
தந்தானே யல்லாது தாளாது
துடித்தான்
தன்பிள்ளை வாழட்டும என்றேதான்
கொடுத்தான்!

குருட்டுமகன் தன்சொத்தைக் குறைந்தவிலை
விற்றுக்
கொண்டோடி வெளிநாட்டில் கும்மாள
மிட்டான்!
பொருட்பெண்டிர் மதுவென்று போனவழி
சென்று
பொருள்தேய்ந்து புகழ்தேய்ந்து தெருவினிலே
நின்றான்!

அந்நாட்டில் பெரும்பஞ்சம் அவ்வேளை
சூழ
அறியாத இளமைந்தன் அலைந்தானே
வாழ!
தன்னாட்டு மனிதனிடம் ஒருவேலை
தேட
தந்தானே ஒருவேலை பன்றிகளோ
டாட!

பன்றிக்குத் தருகின்ற உணவேதான்
உணவு
பாவிக்கு நாளெல்லாம் தந்தையவன்
கனவு!
அந்நேரம் தெளிந்ததுகாண் அவனுடைய
அறிவு
அப்பாவின் கால்களிலே விழுகின்ற
நினைவு!

‘என்தந்தாய் வானுக்கும் உமக்குமெதி
ரானேன்
எத்தனையோ ஊழியர்கள் இங்கிருக்கப்
போனேன்!
உன்வீட்டுக் கூலிகளில் ஒருவனென
ஏற்பாய்
உன்பிள்ளை என்றுசொலத் தகுதில்லை
காப்பாய்!’

இப்படிப்போய் விழவேண்டும் என்றெண்ணிச்
சென்றான்
எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையின்முன்
நின்றன்!
அப்பா என் மகனே என் றணைத்தானே
தந்தை
அன்பான தந்தையின்முன் அழுததவன்
சிந்தை!

எப்போது வருவாயென் றெண்ணியிருந்
தேனே!
இளைத்தாயே என்மகனே கண்மணியே
தேனே!
தப்பான பிள்ளையல்ல எதுவும்வொல்
லாதே!
சந்தர்ப்பம் செய்தசதி வருவாய்இப்
போதே!

யாரங்கே பணியாள்வா, பட்டாடை
நகைகள்
அத்தனையும் அணியுங்கள் அலங்கார
வகைகள்!
பேர்சொல்லும் மகனுக்குப் பெருங்கன்றின்
கறிகள்
பிழையாமல் செய்யுங்கள் விரைவில் எனச்
சொன்னான்!

மாலையிலே மூத்தமகன் மனைக்குவரும்
போது
மனையினிலே சங்கிதம் நடனவகை
நூறு!
சாலையிலே நின்றபடி ஏன்சத்தம்?
என்றன்
தம்பிஇன்று வந்துள்ளார் என்றெருவன்
சொன்னான்!

ஆத்திரத்தில் வெளிப்புறமே மூத்தமகன்
நின்றான்
அப்போது தந்தையவன் அந்த இடம்
வந்தான்!
சாத்திரத்தை மறந்தவனைத் தடபுடலாய்
ஏற்றீர்
சாப்பாடு நடனமென ஏற்றுகிறீர்
போற்றி!

உங்களுடன் இருந்தவரை நானென்ன
கண்டேன்
ஒருநாளும் எனக்கென்று விருந்துவகை
உணடா?
கண்கலங்கி மூத்தமகன் இவ்வாறு
சொல்ல
கனிவோடு தந்தையவன் மறுவார்த்தை
சொன்னான்:

என்னோடு என்றும்நீ இருப்பவனே
யன்றோ
என்செல்வம் எந்நாளும் உன்னுடைய
தன்றோ!
உன்தம்பி இறந்ததன்பின் உயிர்பெற்று
வந்தான்
உண்மையிலே மறுபிறவி அதற்காகச்
செய்தேன்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

At 3:23 AM, Blogger குமரன் (Kumaran) said...

அற்புதம் விஜய். ரசித்துப் படித்தேன்.

இது நீங்கள் எழுதியதா? இல்லை இயேசு காவியத்தில் வருவதா? இயேசு காவியம் என்ற நூலைப் பற்றி கேள்விபட்டுள்ளேன். படிக்கும் போது செய்யுளிலும் படித்ததாய் ஞாபகம். ஆனால் யார் எழுதியது என்று மறந்துவிட்டது.

 
At 5:28 AM, Blogger G.Ragavan said...

அருமையாக இருக்கிறது விஜய். மிகச் சிறப்பாய் செய்திருக்கின்றீர்கள். ஏசுகாவியம் படைத்தது கண்ணதாசன் தானே. அதையும் வாங்கிப் படிக்க வேண்டும்.

 
At 8:38 PM, Blogger Vijay said...

குமரன்

இது இயேசு காவியத்தில் வருவதுதான். எழுதியது கவியரசர் கண்ணதாசன். கூடியவிரைவில் முழு காவியத்தையும் தர முயற்சிக்கிறேன்.

விஜய்

 
At 5:38 PM, Blogger b said...

மிகவும் நல்ல செயல் விஜய். கண்டிப்பாகத் தொடருங்கள்.

 
At 7:53 AM, Anonymous Anonymous said...

Greetings from Down Under, no not Australia, NZ the real downunder! Hi Vijay I was surfing blogs (as you do) looking for prayers information when I came across your site. While this post wasn't an exact match I enjoyed reading your posts. Thanks for the read, I'll visit again some time. take care.

 
At 12:25 AM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

நல்ல முயற்சி விஜய்,


வாழ்த்துக்கள்.

பழைய ஏற்பாட்டிலிருந்து முக்கியமாக பழமொழி ஆகமத்திலிருந்து சில கதைகளைப் புனைந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.நம் ஜி.ராகவன் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். அதற்கென ஒரு தனி தளமும் ப்ளாக்கரில் பதிந்து வைத்துள்ளேன். பார்க்கலாம். நேரம் கிடைக்கும்போது துவங்க வேண்டும்.

 
At 10:35 PM, Anonymous Anonymous said...

Greetings Vijay it's rather cold here today, but summer is comming to our part of the world soon. I was looking for the latest most up to date information on christian and I landed on your page. Although this post is not an exact match I can see why I ended up here while looking for christian Great stuff thanks for the read.....now where did I put that surf board !

 
At 12:51 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

விஜய் இயேசுகாவியம் முழுவதும் நெட்டில் படிக்க கிடைக்குமா?

தனி மடல் அனுப்பவும்

cvalex AT yahoo

 

Post a Comment

<< Home